Encounter: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல குற்றவாளியான ரவுடி விஸ்வாவை காவல்துறை

Gun Shot

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல குற்றவாளியான ரவுடி விஸ்வாவை காவல்துறை என்கவுன்ட்டர் செய்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. வழக்கு விசாரணைக்காக விஸ்வாவை தேடி வந்த காவல்துறை, அவரை பிடிக்க முயன்றபோது தாக்கிவிட்டு தப்ப முயற்சி செய்த நிலையில், சுட்டு கொலை செய்யப்பட்டார்.

சோகண்டி பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி விஸ்வா உயிரிழந்தார். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரவுடி விஸ்வா மீது நிலுவையில் உள்ள நிலையில், சுட்டு கொலைப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றிய தலைவர் கொலை வழக்கில் ரவுடி விஸ்வா தேடப்பட்டு வந்தார். சரித்திர பதிவேடு குற்றவாளியான விஸ்வா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.