என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் – அறிக்கையில் தகவல்

அயனாவரத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயனாவரத்தில் உள்ள ரவுடி சங்கரை பிடிக்க ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கடந்த ஆகஸ்ட -21-ஆம் தேதி முயன்றனர். அப்போது காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் .என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி ஷங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் இருந்தது. இதற்கிடையில் ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கை சென்னை போலீசாரின் பரிந்துரையை ஏற்று வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.எனவே சங்கர் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ரவுடி சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. சங்கரின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 இடங்களை தவிர மேலும் 12 இடங்களில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025