மாநில தேர்தல் ஆணையம் வாக்குறுதிகளை ஏற்று சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கு முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக சார்பில் வழக்கு:
unknown nodeஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்டவை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சமயத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தேர்தல் ஆணையம் அறிக்கை:
unknown nodeஇதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பான அதிமுகவின் சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆள் நடமாட்டத்திற்கு வாய்ப்பு:
unknown nodeஇறந்தவர், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியல் ரகசியமானது. அதை வெளியிட்டால் ஆள் நடமாட்டத்திற்கு வாய்ப்பு உண்டு. இறந்தவர்கள், தொகுதியில் இல்லாதவர்கள் பட்டியலை சரி பார்த்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 238 வார்டுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், வெப் காஸ்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூத் ஸ்லீப்கள் விநியோம்:
unknown nodeபூத் ஸ்லீப்கள் விநியோகிக்க கட்சி முகவர்களுக்கு அனுமதி இல்லை, தேர்தல் அலுவலர்களால் விநியோகம் செய்யப்படும். பதற்றமான 34 வாக்குச்சாவடிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஊகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறை தொடங்கிய பின் அதில் தலையிட முடியாது என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு:
unknown nodeஇந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைய அறிக்கையை தொடர்ந்து சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கு முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். தேர்தல் ஆணையம் வாக்குறுதிகளை ஏற்று சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.