அமலாக்கத்துறை சோதனை! அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் திமுக நிர்வாகிகள்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் திமுகவினர் குவிந்துள்ளனர்.

EDRAID

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் திமுகவினர் குவிந்துள்ளனர்.

கரூர் மற்றும் சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லம் மட்டுமில்லாமல், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதனால் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக பணி நியமன முறைகேடு புகார் எதிரொலியாக, காலை 8 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த சமயத்தில், அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், திமுக நிர்வாகிகள் திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.