அமலாக்கத்துறை சோதனை – பொன்முடியுடன் அமைச்சர்கள் சந்திப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வருகை.
சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு நுங்கப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் ஆகியோரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று கிட்டத்தட்ட 7 மணிநேர தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இன்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி, கேஎன் நேரு, சி.வி.கணேசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொன்முடியுடன் சந்தித்துள்ளது.
நேற்று அமைச்சர் பொன்முடியுடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனால் அமலாத்துறையின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நேரில் ஆலோசனை வழங்கினார் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ. மேலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு சென்றுள்ளனர். இக்கட்டான தருணத்தில் நாங்கள் துணை நிற்போம் என்று பொன்முடிக்கு அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். பாஜகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.