முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணத்தை அவதூறாக பேசக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒட்டுமொத்த தமிழக நலனுக்கான கோரிக்கையாகவே பிரதமர் மோடி, மத்திய அமச்சர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தபோதும் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தினார். பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் கம்பீரமாக சந்தித்து பேசினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த தேவையும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை என குறிப்பிட்டார். இதன்பின் பேசிய அவர், தன்னை காப்பாற்றிக்கொள்ளத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஒவ்வொரு முறையும் டெல்லி சென்றபோது தமிழ்நாட்டின் நலன்களை ஈபிஎஸ் அடகுவைத்ததாக தெரிவித்தார்.
மேலும், தன்னை பாதுகாத்துக்கொள்ள பிரதமரை சந்தித்த பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் பயணத்தை அவதூறாக பேசக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…