ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு.
ஈரோடு இடைத்தேர்தல்:
unknown nodeஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தளுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது கேட்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுகவில் தென்னரசு, தேமுதிகவில் ஆனந்த், நாணம் தமிழர் கட்சி சார்பில் மோகன உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை:
unknown nodeஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. ஒருபக்கம் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மறுபக்கம் பரிசுப்பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா தடுப்பு மற்றும் அனுமதியின்றி இயங்கிய தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பறக்கும் படை மூலம் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் விதி மீறல்:
unknown nodeஅதன்படி, தேர்தல் விதி மீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்ட நிலையில், 14 பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் அலுவலர் சிவகுமார் தெரிவித்திருந்தார். இதுபோன்று, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
வேட்பாளர் மீது வழக்குப்பதிவு:
unknown nodeஇந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்.20ல் ஆலமரத்தெருவில் அனுமதி பெறாமல் தேர்தல் விதியை மீறி பரப்புரை மேற்கொண்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 30 பேர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.