ஈரோடு இடைத்தேர்தலில் வென்றது எடப்பாடி பழனிசாமியே என சிவகங்கையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தார். இபிஎஸ் அணி சார்பில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகளே மட்டுமே கிடைத்து டெபாசிட்டை தக்க வைத்தார். இணைத்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றும் ஓபிஎஸ் அணியினர் குற்றசாட்டி வருகின்றனர்.
மறுபக்கம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது என்றும் திமுக 300 கோடிக்கு மேல் ஈரோடு கிழக்கில் செலவு செய்து உள்ளது எனவும் இபிஎஸ் அணியினர் கூறி வருகின்றனர். இடைத்தேர்தலில் உண்மையாக அதிமுக தான் வென்றுள்ளது, திமுகவுக்கு பயத்தை காட்டியுள்ளோம் என்றும் கூறியுள்ளனர். இந்த சமயத்தில், வரும் 9-ஆம் தேதி இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நாடாத உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், ஈரோடு இடைத்தேர்தல், தேர்தலே அல்ல, அந்த தேர்தலை நடத்த வேண்டியதே இல்லை, அவர்களே அறிவித்து சென்றிருக்கலாம். ஈரோடு இடைத்தேர்தலில் வென்றது எடப்பாடி பழனிசாமியே என தெரிவித்தார். மேலும், வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தியில் அரசு உண்மை நிலையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.