ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவனுக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்.
ஈரோடு தேர்தல் பிரச்சாரம்:
unknown nodeஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அனைத்து கட்சி சார்ந்த நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும். இதன்பின் வெளியூர் நபர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தேர்தல் பரப்புரை:
unknown nodeஇந்த நிலையில், ஈரோடு தேர்தல் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தங்கள் வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் இறுதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மகளிருக்கு உரிமை தொகை:
unknown nodeஈரோட்டில் பரப்புரையில் பேசிய முதலமைச்சர், கடந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார். மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
ஈரோடுதான் அடித்தளமே:
unknown nodeமேலும், என்னுடைய ஆட்சி காலத்திலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் எனவும் தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் திமுகவின் அடித்தளமே ஈரோடுதான், கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு தான் எனவும் குறிப்பிட்டார்.
தீவிர வாக்கு சேகரிப்பில் முதல்வர்:
unknown nodeஇந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கருங்கல்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். சாலையில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.