ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்!

இணையசேவை பாதிப்பால் அதிகாரபூர்வ முடிவுகளை பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நடவடிக்கை.

இணையசேவை பாதிப்பால் அதிகாரபூர்வ முடிவுகளை பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நடவடிக்கை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 10-ஆம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 48,062 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் பெற்றுள்ளார்.

மறுபக்கம் அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட் தொகையை தக்க வைத்தார். 10-ஆம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 28,239 வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 76,301 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த சமயத்தில் வாக்கு எண்ணிக்கை தீவிரமா அடைந்து வரும் நிலையில், இணையசேவை பாதிப்பால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அடுத்தடுத்து சுற்று நிலவரங்களை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமதத்தை ஈடு செய்ய கூடுதல் கணினிகள் அமைத்து சுற்று விவரங்களை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.