ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – ஓடி ஓடி வாக்குசேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி  உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

unknown node

அந்த வகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, ஆதரவாக அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதாவது,  திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக, குழந்தைக்கு முத்தமிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரித்தார். இதன்பின், ஈரோடு கிழக்கு தொகுதியில் வீரப்பன் சத்திரம் பகுதியில் தெருவிக்குள், சாலைகளில் ஓடி கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.