ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது தொடக்கம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. முதல் சுற்று முடிந்து ஒரு மணி நேரம் ஆக உள்ள நிலையில், அதிகாரபூர்வ வாக்கு நிலவரம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியுள்ளது.
முதல் சுற்று முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலில் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.