ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவன் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை அறிக்கை.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது என ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து குணமடைந்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். சமீபத்தில் சட்டசபையில் எம்.எல்.ஏ.வாகவும் பதவியேற்றுக்கொண்டார். இந்த சமயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா உறுதியானது என்றும் உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.