6 மணி நேரத்தில் 10.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ...!

Excavation work in Adichanallur has resumed today after 17 years.

தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம் கடந்த 6 மணி நேரத்தில் 10.57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் தற்பொழுது கொரோனா வைரஸை ஒழிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரோனாவை ஒழிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழகத்தில் நான்கு கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் 30 ஆயிரம் முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரையிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 10.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.