பரபரப்பு.., நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து..!

The front of a government bus caught fire near the Rajiv Gandhi statue in Porayaru.

பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே அரசு பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து இன்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே பேருந்து சென்றபோது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சில நொடிகளில் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.

உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். தீ வேகமாக பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பொறையாறு  தீயணைப்புத் துறையினர் தீயை  30 நிமிடங்கள் போராடி தீயை  அணைத்தனர். அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.