சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு..!

Pregnant and lactating mothers at Salem Government Hospital have been suspended.

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பான்டி சுகாதார நிலையத்தில் மருத்துவராக  சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிக்சை பலனின்றி சண்முகப்பிரியா உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பெண் மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

unknown node