"வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை"- 16 பள்ளிகளுக்கு அபராதம்.. ஆட்சியர் அதிரடி!

District Collector Govinda Rao has imposed a fine of Rs 5,000 on 16 schools and 4 colleges in the Tanjore district.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவு.

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 16 பள்ளிகளில் 214 மாணவ, மாணவிகள் மற்றும் 16 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 16 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி, ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.