பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்று என உருக்கமாக எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னையை அடுத்த மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
அந்த மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறியுள்ள கருத்துகள் சமூகத்தின் மனசாட்சியையும் குத்திக் கிழிக்கின்றன. கோவை, கரூர், சென்னை என பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட எந்த பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடாது. தற்கொலைகள் கூடாது என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…