தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.பின் நடைபெற்ற விசாரணையில், ‘லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி தேவை’ என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்தது. முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையினருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்துக் கொண்டிருப்பதையும், உரிய நீதி வழங்கப்படும் என்பதையும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய கூடாது என்றும் தெரிவித்தது. மேலும் சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது .பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தும் , தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜூன் 26-ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…