#Breaking: தந்தை-மகன் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட போலீசாரை காவலில் எடுக்க நடவடிக்கை!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்காரணமாக, டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க வந்தனர். அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், பொருட்கள், சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவையை விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரி அனில்குமார் ஒப்படைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025