சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதுதொடர்பாக சிபிஐ பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.