குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .எனவே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா ,பஞ்சாப், ராஜஸ்தான்,மேற்கு வங்க மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலயில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தி,ல்பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…