இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு – தலைமை தேர்தல் அதிகாரி!

Chief Electoral Officer Sathya Pratha Sahoo has announced that the revised final voter list for 2022 will be released tomorrow.

2022-ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு.

வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். 2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 531 பேராக இருந்தது. அதில், 3 கோடியே 9 லட்சத்து 17 ஆயிரத்து 667 பேர் ஆண்கள். 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 522 பெண்கள் உள்ளன.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தும் மேற்கொள்ளவதற்காக, சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பங்கள் முழுவதுமாக பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.