தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்தில் தீ விபத்து!

A fire broke out at a container terminal at the SIPCOT premises in the Thoothukudi district, destroying goods worth several lakhs of rupees.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 கோடி ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானானதாக தகவல்கள் வெளியானது.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் பகுதியில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 7 தீயணைப்பு வாகனம் ஈடுபட்டு வருகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், இந்த தீயில் கருகி காகித பண்டல்கள், தேங்காய் நாறுகள், பொம்மைகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானதாகவும், தீ விபத்து நடந்த இடத்தில் யாரேனும் சிக்கியுளார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.