முதன்முறையாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு – விஜயபாஸ்கர்

Jallikattu competitions are to be held as per the rules laid down by the Government of Tamil Nadu and the Public Health Department.

கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், வரும் 17-ஆம் தேதி எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதற்கான தொடக்க நிகழ்ச்சியாக கால்கோல் நடும் விழா அம்மன் குளதிடலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு கால்கோல் நட்டு வைத்தார். அதன்பின் அவர் கூறுகையில், இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் அவர் கூறுகையில், முதன்முறையாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது என்று  தெரிவித்துள்ளார்