முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் என்றென்றும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகிந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தா நாளுக்கு முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், CSK “THALA FOREVER” தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்களின் சாதனைகளும், பணிவும் பல இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும். உங்களின் ஒப்பற்ற தலைமை பண்புகளால் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
unknown node