முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு- இன்று ஜனாதிபதி வருகை..!

President Ram Nath Kovind will leave Delhi by private plane at 10 am today.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில்  நடைபெறுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

இதனால், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர், கிண்டி ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார்.