ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட தங்கத்தில் 12 கிலோ தங்கம் மீட்பு.
நேற்று காலை இலங்கையில் இருந்து கடத்தல் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக இந்திய கடலோர காவல் படைக்கும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து நேற்று அதிகாலை 5 மணி முதல் அதிகாரிகள் மன்னர் வளைகுடா பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக கருதப்பட்ட கடல் ராஜா என்ற நாட்டுப் படகை சோதனை செய்வதற்கு அதிகாரிகள் முற்படுவதற்கு முன்பதாகவே அந்தப் படகில் ஒரு பார்சலை கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
unknown nodeஇதனையடுத்து காவல் படையினர் படகை சுற்றி வளைத்து நாட்டுப் படகை பறிமுதல் செய்தனர். மேலும் படகில் இருந்த இரண்டு பேரிடம் கடலோர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு
இதனையடுத்து கடலில் வீசப்பட்ட தங்கத்தை தேடும் பணியில் 2 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது வீசப்பட்ட தங்கத்தில் 12 கிலோ தங்கத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட தங்க ரூ.7.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.