சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்!

Relatives of former minister Saroja have complained that he was cheated into buying a job in a nutrition program.

சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சத்துணவு மற்றும் சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் தான் குணசீலன். இவர், முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் சரோஜா தன்னையும், தன் மனைவியையும் அழைத்து ராசிபுரத்தில் வீடு கட்ட வேண்டும் எனவும், அதற்காக பணம் வாங்கிக் கொடுத்தால் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இதை நம்பி தனது மனைவி 15 பேரிடம் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கினார். அதில் 50 லட்சத்தை முதற்கட்டமாக எனது வீட்டில் வைத்து சரோஜாவிடம் வழங்கினேன். அப்பொழுது அவருடைய கணவரும் உடன் இருந்தார். அந்த பணத்தை வைத்து தான் தற்போது ராசிபுரத்தில் உள்ள வீட்டை கட்டி உள்ளனர் எனவும், அதன் பின்னதாக இரண்டாம் கட்டமாக 26 லட்சத்து 50 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் கூறியபடி தங்களுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் பணம் கொடுத்தவர்கள் தன் மீது போலீசில் புகார் அளித்து விடுவோம் என மிரட்டி வருவதாகவும், இதனால் தான் சரோஜா மீது தான் ராசிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளேன் எனவும் கூறினார். மேலும் அந்த புகாரில் யார் யார் எவ்வளவு பணம் கொடுத்துள்ளார்கள் என்ற விவரமும் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.