தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி – முதல்வர் பழனிசாமி

Chief Minister Palaniachai has said that preliminary work is underway to provide free corona vaccination in Tamil Nadu.

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், துளிர்க்கும் நம்பிக்கை என்ற தலைப்பில் பிரபல தொலைக்காட்சி மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும், கொரோனவால் இழந்த மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் கூட இந்தியாவிலேயே அதிகப்படியான முதலீடுகள் தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.