இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு-தமிழக போக்குவரத்துத்துறை..!

Default Image

தமிழக போக்குவரத்துத்துறை, இலவசமாக அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா பயணசீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை தொடங்கினார். அதன் படி மகளிர் அரசு போக்குவரத்துகழகத்திற்கு கீழ் உள்ள நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

அதிலிருந்து பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இவர்களுக்கான கட்டணமில்லா பயணசீட்டு அச்சிடப்பட்டு, கடந்த 21 ஆம் தேதி முதல் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணசீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு பிரிவுகளிலும் எத்தனை பேர் பயணிக்கின்றனர் என்பதை கணக்கிடுவதற்காக பயணசீட்டு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்