மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும் என அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
unknown node