இனி வெளியூர் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாகத்தான் சென்னை வரவேண்டும்; போக்குவரத்துக் கழகம்.!

அனைத்து விரைவுப் பேருந்துகளும் தாம்பரம் வழியாக சென்னைக்குள் வரவேண்டும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து விரைவுப் பேருந்துகளும் தாம்பரம் வழியாக சென்னைக்குள் வரவேண்டும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பயணிகளின் வசதிக்காக வெளியூரிலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் வழியாக சென்னைக்கு வரவேண்டும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பயனடைவார்கள் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாலை 5மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியைப் பயன்படுத்தி சென்னை கோயம்பேடு வருமாறு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் அறிக்கையில் கூறியுள்ளது.