இன்று முதல் இந்த மாத பொருட்களை இலவசமாக ரேஷனில் பெறலாம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக இன்று விநியோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்கள் இந்த மாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025