live : தவெக முதல் பொதுக்குழு கூட்டம் முதல்…10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரை!
மார்ச் 28 இன்றயை முக்கிய செய்திகள் கீழே நேரலையாக கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூடுகிறது என்பதால் 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இன்று தொடங்கிய தேர்வு வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்காக 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு பணியில் 48,500 ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக மாநிலம் முழுவதும் 8.86 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025