5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் கைது!

5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள சாத்தமங்கலத்தில் சிலர் குடும்பத்துடன் வந்து அங்கேயே தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பெண்குழந்தைகளை கூட்டுவந்துள்ளனர். ஆனால், இந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சிலரின் பெண் குழந்தைகளை ஒரு கும்பல் வாத்து பண்ணையில் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் அச்சிறுமியை மீட்டு உள்ளனர்.
மேலும், அவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கொத்தடிமைகளாக மட்டும் இருக்கவில்லை. 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் எனும் அதிர்ச்சி தகவலறிந்த புதுச்சேரி காவல் அதிகாரிகள் வில்லியனூர் பகுதியை சேர்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, சிவா, மூர்த்தி மற்றும் அய்யனார் உள்ளிட்ட 6 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து மேற்கொண்டு விசாரித்தும் வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025