கீழடி அருங்காட்சியகம்: நாளை முதல் கட்டணம் வசூல் – தொல்லியல் துறை அறிவிப்பு

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தொல்லியல்துறை அறிவிப்பு.

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தொல்லியல்துறை அறிவிப்பு.

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் உள்ளூர் வாசிகளில் பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு – ரூ.10, மாணவர்களுக்கு – ரூ.5 வசூலிக்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வாசிகளில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும், புகைப்படம் எடுக்க 30 ரூபாயும், வீடியோ படம் எடுக்க 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.18.41 கோடி செலவில் கட்டப்பட்டு மார்ச் 6-ம் தேதி முதல் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆறு கட்டட தொகுதிகளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 54 பேர் அமரும் வகையில் மினி ஏசி தியேட்டர், மெய்நிகர் காட்சி, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.