பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற பெற்றோர்... மனதை படபடக்க வைக்கும் சம்பவம்....

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே வைரமுருகன் மற்றும் சௌமியா என்ற  தம்பதிக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே வைரமுருகன் மற்றும் சௌமியா என்ற  தம்பதிக்கு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்  கடந்த 2-ஆம் தேதி புதிதாக பிறந்த  குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைத்துள்ளனர்பெற்றோர்.  இந்நிலைய்யில், குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி சீர்மிகு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

unknown node

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் திரு. செந்தாமரை, துனை கண்காணிப்பாளர் திரு. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு  நடத்தினர். இதில் பிறந்து 31 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வைரமுருகன் மற்றும் சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி சீர்மிகு காவல் துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.