பிரதமர் மோடி, குடியரசு தலைவரை சந்தித்ததில் மகிழ்ச்சி – நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
டெல்லியில் நேற்று நடைப்பெற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, டெல்லியில் நேற்று வழங்கப்பட்டன. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்துக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின்பு நடிகர் ரஜினிகாந்த் குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மதிப்பிற்குரிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களையும், பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025