தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று (ஏப்ரல் 30) கணிசமான அளவில் குறைந்த நிலையில், இன்று (மே 2) சற்று உயர்ந்துள்ளது.நேற்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மாலைக்குள் மேலும் குறைந்து, சவரன் ரூ.1,040 வீழ்ச்சியடைந்து ரூ.1,11,360-க்கும், கிராம் ரூ.130 குறைந்து ரூ.13,920-க்கும் விற்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் சவரன் ரூ.1,440 குறைந்தது.வெள்ளி விலையில் நேற்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையானது.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த ஏற்ற இறக்கம், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணம், பண்டிகை மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்குமாறு வர்த்தகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!