நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி – தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

Today, the price of jewelery gold has gone up by Rs 200 per razor in a single day, much to the shock of jewelery lovers.

இன்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ரூ.4,525க்கு விற்பனையாகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.36,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று, 24 காரட் தங்கம் (தூய தங்கம்) விலை ஒரு கிராம் ரூ.4,889 விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு சவரன் ரூ.39,112 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு உயர்ந்து, ரூ.69.10க்கு வர்த்தகமாகிறது. வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.69,100 என விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.