பிப்.13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டி.
கல்வி சுற்றுலா:
unknown nodeஅரசு பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது. அதாவது, அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள வானவில் மன்றம், வினாடிவினா, இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், மாநில அளவில் வற்றி பெறும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்:
unknown nodeதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் நிலையில், இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கடந்த ஆண்டு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் போட்டி:
unknown nodeஇதனைத்தொடர்ந்து, தற்போது அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த போட்டிகள் பிப்.13ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் நடைபெற உள்ளது. இதில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் வெற்றி பெறும் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.