2015-ம் ஆண்டு வெள்ளத்திற்கு பின்பும் பாடம் கற்காத தமிழக அரசு! உயர் நீதிமன்றம் அதிருப்தி!

High court judges have expressed dissatisfaction that the Tamil Nadu government has not yet learned its lesson even after the 2015 floods.

2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்பும், தமிழக அரசு இன்னும் பாடம் கற்கவில்லை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சென்னையில் விதி மீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மாற்று ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள் 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பின்பும், தமிழக அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் விதிமீறல் கட்டடங்களை இடிக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.