உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி விடுவித்து அரசாணை.
2023-24ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி மற்றும் நிதி விடுவிப்பு தொடர்பனாக அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் ‘நமக்கு நாமே’ திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘நமக்கு நாமே’ திட்டம், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் கட்டுதல், அரசு விடுதிகளுக்கு கட்டடம் கட்டுதல், உள் விளையாட்டரங்கம் அமைத்தல், சமுதாயக் கூடம் கட்டுதல், அரசு பள்ளி கட்டடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node[Image Source : Twitter/@Nandhini_Twits]
