அரசு போக்குவரத்து கழக உணவகங்களை மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் .
தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் துறையில் புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில் அரசு போக்குவரத்து கழக உணவகங்களை மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.