ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி 20ம் தேதி மார்க்சிஸ்ட் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியிடம் குறைப்பட்ச அரசியல் நாகரீகம் கூட இல்ல என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற பெரிய தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் விட்டுவிட்டார் ஆளுநர்.
அரசு தயாரித்த உரையை மாற்றியும் திருத்தியும் படித்தது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்ட அனைத்து கோட்பாடுகளையும் மீறியுள்ளார் ஆளுநர். இந்திய வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவரின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதன்முறை எனவும் கூறியுள்ளார்.
ஆளுநர் பாதியிலேயே எழுந்து சென்றது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராக அனைத்து காட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டை விட்டு வெளியேறவும், ஆளுநர் பதவியில் இருந்து நீக்கவும் வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி மார்க்சிஸ்ட் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.