தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதன்படி, 2021 மே மாதம் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்றவாறு முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது, ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ராஜகண்ணப்பன், உள்ளிட்டச் சிலரின் இலாக்காக்கள் மட்டும் மாற்றப்பட்ட நிலையில், இந்த ஓராண்டில் எந்த ஒரு அமைச்சரும் நீக்கப்படவில்லை.
திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஓராண்டு நிறைவு தினத்தை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஓராண்டு நிறைவிற்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…