குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிப்பு.
டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வு:
unknown nodeடி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு உள்ளனர். இந்த சமயத்தில் சென்னை பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர்வு தொடங்குவதில் தாமதம்:
unknown node2,500 more vacancies announced for TNPSC Group-4 Exam. [Image Source: Twitter]
தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் பதிவெண்கள் மாறியுள்ளன. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கூடுதல் நேரம்:
unknown nodeஇந்த நிலையில், குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. எந்தெந்த மையங்களில் தேர்வு தாமதமாக தொடங்குகிறதோ அந்த மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும். எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்கியதோ அதற்கேற்ப கூடுதல் நேரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி கூறியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு:
unknown nodeஇதனிடையே, தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ் தகுதி தேர்வில் விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் தகுதி தேர்வில் இருந்து விலக்கு கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தனர்.