குட்கா ஊழல் ...!தொடர்ந்து பி.வி.சீனிவாச ராவ் ,.வி மாதவ ராவ் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை...!

இன்றும் பி.வி.சீனிவாச ராவ் மற்றும் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்றும்பி.வி.சீனிவாச ராவ் மற்றும் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ், சீனிவாசன் இருவருக்கும் மேலும் 3 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 5 வது நாளாககுட்கா தயாரிப்பு நிறுவன அதிபர் பி.வி.சீனிவாச ராவ் மற்றும் குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ்உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குட்கா ஆலை  மற்றும் முகவர்கள் இடத்திற்கு  அழைத்துச்சென்று  சென்று சிபிஐ விசாரனை நடத்தி வருகின்றனர்.