குட்கா ஊழல் புகார்..! முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மீது வழக்கு தொடர அனுமதி..!

குட்கா ஊழல் புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மீது வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் மீது வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் புகாரில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மீது வழக்கு தொடர சிபிஐக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் புகையிலை, குட்கா பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் உள்ள குட்கா கிடங்கில் வருமானவரிச் துறையினர் சோதனை நடத்தினர். இந்த குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

ஏற்கனவே, சிபிஐ தரப்பில் அவர்கள் மீது வழக்கு தொடர தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து அனுமதி பெற்றுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில் தற்பொழுது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வழக்கு தொடர சிபிஐக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.